நானும் என் எழுத்தும்!

எழுதுவது என்னுடைய நீண்ட நாளைய ஆசை, விருப்பம், அவா எல்லாம். உருப்பெறாமல் கரையும் என் சிந்தனைகளுக்கு உருவம் தரும், உயிர் தரும் முயற்சியே இந்த வலைப் பதிவு.
பேனா எடுத்தவுடன் கண்ணாமூச்சி விளையாடும் என் எண்ணங்களுக்கும் எனக்கும் நடக்கப்போகும் போராட்டமே இந்தப் பதிவுகள்.

எவ்வித இலக்கணங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இங்கு என்னை நானே எனக்கு அறிமுகப் படுத்திக்கொள்ளப் போகிறேன்! கதைகளையும், கவிதைகளையும், என் எண்ணங்களையும் அதன் வண்ணம் மாறாமல் பதிய முனையப் போகிறேன். தவறுகள் செய்யப் போகிறேன் அதை உணரப் போகிறேன் அதையே தொடரப் போகிறேன்.

என்னை, என் எண்ணங்களை செதுக்கிய என் நண்பர்களையும், எனக்கு, ஏன் தமிழகத்திற்கே சிந்திக்க கற்றுக் கொடுத்த எங்க ஊர்ப் பெரியாரையும் நினைத்துக்கொண்டே விளையாடத் தயாராகிறேன்...

அறுவடையாகும் அஞ்சலிகள்!


என் இதயம் ஒரு சுடுகாடு.

எத்தனை காதல்கள் விதைக்கப்படாமல்  புதைக்கப் பட்டிருக்கின்றன !!