இளமை ஊஞ்சலாடுகிறது - 2



நான்கு நாட்கள் சிரமப்பட்டு நகர்ந்திருந்தன.

அந்த திருமண மண்டபம் மின் விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மலர்த் தோரணங்களால் விழாக்கோலம் பூண்டிருந்தது. மேளச் சத்தமும் நாயணச் சத்தமும் விண்ணைப் பிளந்தது கொண்டிருந்தது. அம்மண்டபத்தின் முகப்பினை ஏராளமான கார்கள் ஆக்ரமித்துக் கொண்டிருந்ததன. எங்கு நோக்கினும் மனிதர்கள் முகமாக இருந்தது. அனைத்திலும் ஆடம்பரம் தெரிந்தது.
அம்மண்டபத்தையே சில நொடிகள் திகைத்து பார்த்தவாறு நின்றிருந்தான்  குணா.

பல  நாட்கள் தூங்கதவன் போல் முகம் களைப்பாய் இருந்தது. அவன் தலை பாரமாக இருப்பதாக உணர்ந்தான். எதிலும் சிரத்தை இல்லாமல் சிறிது தூரம் நடந்து மண்டபத்தின் வாசலுக்கு வந்தான். மண்டபத்தினுள் நுழைய எத்தனித்தவன் எதையோ பார்த்து அதிர்ச்சியாக நின்றான். அந்த வரவேற்புப் பதாகையில் கை கூப்பி சிரித்துக் கொண்டிருந்தாள் அபிராமி. நடை பிணமாக மண்டபத்தினுள் நுழைந்தான். மணமேடையை வேண்டா வெறுப்பாகப்  பார்த்தான். குணாவின் இதயம் கனமானது; ஏதோ தொண்டையைக் கவ்வுவது போலிருந்தது.

"மச்சி... இப்போ gift கொடுக்க முடியாது.. கூட்டம் அள்ளுது.. நாம பொய் சாப்டுட்டு வந்துடுவோம்...என்னா?"
"ம்ம்.. போவோம்", குணா ஆர்வமில்லாமல் சொன்னான்.
திருமணத்திற்கு வந்திருந்த அவன் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடலானான் குணா.   ஆனால் அவன் நண்பர்கள் பேசுவது எதுவும் அவன் காதில் விழவே இல்லை.
"ஆனா மச்சி.. இந்த வெங்கடேசன் கல்யாணத்துக்கு இவ்ளோ கூட்டம் வரும்னு எதிர் பார்க்கல.."
"அவன் சொந்தகாரங்கல்லா இங்கதான் இருக்காங்க.. அவனோட படிச்ச நாம எல்லோரும் இங்கதான் இருக்கோம்.. கூட்டம் வராம என்ன? " 
"இந்தப் பய புள்ள காலேஜ்ல என்ன தெரியுமா சொன்னான், first டைம் propose பண்ணி சொதப்பனதுக்கு அப்புறம்? "
"காலேஜ்ல இவன் லவ் பண்ணுனானா? என்னடா சொன்னான்?"
"ஆமாண்டா.. ஜூனியர் பொண்ண..
அவ 'நோ' சொன்னதுக்கு அப்புறம்.. நான் கல்யாணமே பண்ணப் போறது இல்ல.. அவளையே நெனச்சு வாழப்போறேன்னு சொன்னான்.."
"டேய்.. லூசா நீ? அது ஏதோ மப்புல சொல்லிருப்பான்..
அவன் என்ன 'பூவே உனக்காக' விஜய்யா ?
ஆமா இது.. லவ் marriage தானே?"
"அதனால தான்.. சொல்றேன்.. வெண்ண...
கதையைக் கேளு..
இந்த பொண்ணும் வெங்கடேசனும் ஒரே ஆபீஸ்..
பார்த்து, ஒரே வாரத்துல propose பண்ணிட்டான்..!!
அவளும் ஒத்துக்கிட்டா..!!"
"எப்டி மச்சி இது?
ஒரே வாரத்துல 'காதலா'?"
"ஏன் வரக்கூடாதா??
காதல்னா என்ன? சொல்லு? "
"ஏன்.. நீதான் சொல்லேன்.."
"கவர்ச்சிக்கு இன்னொரு வார்த்தைதான் காதல்..!
அந்த கவர்ச்சி பார்த்த உடனே வரலாம்.. பத்து நாள்ல வரலாம்..
இல்ல கேரக்டர புரிஞ்சுக்கரன் பேர்வழின்னு பேசிப் பேசி, பத்து மாசம் கழிச்சு வரலாம்..
முக்கியமா... அது, யார் மேல வேணா வரலாம்... எத்தன வாட்டி வேணா வரலாம்.. எந்த வயசுல வேணா வரலாம்.. எல்லாம் கெமிக்கல்ஸ் மச்சி..!!!!
அத புனிதம்னு சொல்றவன் முட்டாள்..!!!"
 "ஆமா.. சொல்லிட்டரு டவுசரு.. கேட்டுக்குங்க..
டேய்.. இங்கொருத்த நம்ம நாட்டோட 'இறையாண்மை'க்கு எதிரா பேசறான்.. புடிச்சு 'புழல்'ல போடுங்கப்பா..!!! "

இந்த உரையாடல் எதுவும் காதில் விழாதவன் போல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
"டேய்.. குணா.. ஏன்டா ரொம்ப அமைதியா இருக்க?
எப்பவும் இப்டி இருக்க மாட்டியே..?
என்ன love failure ah .. ?
என்ன கல்யாணப் பொண்ணுதான் உன் லவ்வரா ??"
அவன் நண்பர்கள் அனைவரும் சிரிக்கலானார்கள்.
குணாவுக்கு கோபம் கொந்தளித்தது; அவமானமாக இருந்தது. நிமிர்ந்து எதிரே பார்த்தான், கை கூப்பி சிரித்துக் கொண்டிருந்தாள் அபிராமி.
இனி ஒரு நொடி கூட இந்த மண்டபத்தில் இருப்பதில்லையென முடிவு செய்தான்.   
"மணி.. நான் கெளம்பறேன் டா.."
"டே.. இருடா..gift கொடுத்துட்டு போலாம்..
நீ வந்தேன்னு அவனுக்கு தெரிய வேணாமா?", நண்பர்கள் chorusaaga சொன்னார்கள்.
"இல்லடா.. ஒரு முக்கியமான conf - call  இருக்கு.. கண்டிப்பா போகணும்.."
அவன் நண்பர்கள் அனைவரும் அவனை சந்தேகமாகப் பார்த்தார்கள். 
அனைவரிடமும் சொல்லி விட்டு, போலியாக சிரித்துவிட்டு  அந்த இடத்தை நகர்ந்தான்.

மண்டபத்திற்கு வெளியே தன் வண்டியை இறுக்கமாக பிடித்தவாறே நின்றிருந்தான். அவன் கண்களில் நீர் பணிந்திருந்தது.
கண்களை துடைத்துக்கொண்டே திரும்பினான். அந்த பேருந்து மெதுவாக அவனை கடந்தது. பேருந்தின் உள்ளே பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்தான்.
பேருந்தின் உள்ளே சன்னலுக்கு அருகே அமர்ந்திருந்தாள் அபிராமி, நிஜமான அபிராமி. திரும்பி வரவேற்புப் பதாகயைப் பார்த்தான், அங்கு அறிமுகமில்லாத ஒரு  பெண் கை கூப்பி சிரித்துக் கொண்டிருந்தாள். மெலிதாகத் தெளிந்தான்.   

வீடு வந்து சேர்ந்தான். எதிர் வீட்டுக் கதவுகள் இன்னும் பூட்டின் பிடியிலிருந்து விடுபடவில்லை.. செல்லை எடுத்து டயல் செய்தான், பயனில்லை. அவள் இன்னும்  சிறிது நேரத்தில் வீடு வந்து சேர்ந்துவிடுவாள். நம்பிக்கையுடன் படுத்தவன் உறங்கிவிட்டான்.
அன்று காலை சீக்கிரமே எழுந்துவிட்டான்.


இன்று......

பைக் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஐந்து நாட்கள் அவன் பட்ட துன்பம் குணாவை ரொம்பவே வாட்டி வதைத்து இருந்தது. 'அவளை பார்க்கவாவது முடிந்ததே அதுவே போதும்' என்பது போல் சென்று கொண்டிருந்தான்.
அபிராமி அந்த வீதியைக் கடந்து அடுத்த வீதிக்குள் நுழைய முற்பட்டாள். குணா சுற்றும் முற்றும் பார்த்தவாறே அவ்வீதியைக் கடந்து அவளிடம் நெருங்கினான், வீதி நிசப்தமாக இருந்தது. குணா பின்தொடர்ந்து வருவதை அவள் கவனித்துவிட்டாள்; தடுமாறி வீதியின் பக்கத்தில் இருந்த வளர்ந்திருந்த புங்கை செடிக்கிளையில் மோதினாள்; 'வெடுக்'கென்று அக்கிளையில் இருந்த இலையை கோபமாகப் பிடுங்கினாள். அந்த வீதியை கடக்கும்வரை பொறுமையாக பின்னாலே சென்றான்.
நேரத்தை வீணடிக்க குணாவுக்கு துளியும் விருப்பமில்லை, வண்டியை வேகமாக செலுத்தினான், அவளை நெருங்கி வழிமறித்து நிற்க முயன்றான். கோபமாக கையில் வைத்திருந்த இலையை அவன் முகத்தில் வீசி எறிந்துவிட்டு, அவனை விட்டு விலகிச் சென்றாள். குணா அவளை விடுவதாக இல்லை. இம்முறை அவளை தொட்டுவிடும் தூரத்துக்கு நெருங்கியவன் கோபத்தை மறைத்துக் கொண்டு கேட்டான், "ஏய்.. அபி...என்ன பால் வாங்கவா..?". அவள் பதில் பேசவில்லை, கையில் மிச்சமிருந்த இலையை அவன் மீது விட்டெறிந்துவிட்டு அவனை மிகவேகமாக கடந்து சென்றாள். அவனுக்கு எதுவுமே புரியவில்லை, அவள் செய்கையின் அர்த்தம் விளங்கவில்லை, ஆத்திரமாக வந்தது அவனுக்கு. 
கோபம் கொப்பளித்தவனாக சுற்றும் முற்றும் பார்த்தான், எதிரே ஒருவன் அவர்கள் இருவரையே வெறித்து பார்த்தபடி வந்துகொண்டிருந்தான். அவனை துளியும் பொருட்படுத்தாமல், அதை செய்ய முடிவு செய்தான். வேகமாக அவளைத் தாண்டி வந்து, அவளை மறித்து வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினான்.
"hallo madam..என்ன தெரியுதா...?"
அவள் பதில் எதுவும் சொல்லாமல் அவனைத் தாண்டி நகர்ந்தாள்.
ஆத்திரம் கொப்பளிக்க குணா கத்தினான், "ஏய்... நில்லுடி...".
அபி திடுக்கிட்டு நின்றாள். ஆக்ரோசமாக அவளருகில் வந்தவன், தலையைக் குனிந்த படி அவனைப் பார்க்க விருப்பமில்லாமல் நின்றிருந்தவளின் முகத்தை தொட்டு நிமிர்த்தினான். கடும் கோபத்தில் கத்த ஆரம்பித்தான்.
"ஏய்.. படிச்சவதான நீ... பேசிகிட்டே இருக்கேன்.. போயிட்டே இருக்கே.. என்ன யாருன்னே தெரியாதா உனக்கு..?
சிரிச்சு சிரிச்சு பேசறவன்லாம் என்ன கோமாளின்னு நெனச்சியா..?
நின்னு, பேசக் கூட மாட்டீங்களோ..? இதுக்கு முன்னாடி பேசல..?
உனக்கு புடிக்கல.. விருப்பம் இல்லன்னா... நாகரிகமா சொல்ல வேண்டியதுதானே.. நான்பாட்டுக்கு என் வேலைய பார்த்துட்டு போயிருப்பேன்..
ஏன் இப்டி என்ன அலைய..?
நீ என்ன செஞ்சாலும் தாங்கிட்டு நிக்க, நான் என்ன மரம்னு நெனச்சியா... மனுசன்டி..
நான் நாகரிகமாதானே என்னோட விருப்பத்த உன்கிட்ட சொன்னேன்.. புடிக்குதோ புடிக்கலையோ பழகுன பாவத்துக்கு பதில் சொல்லனுன்னு உனக்கு தோனல..
போன் பண்ணுனா எடுக்கல.. msgukku reply பண்ணல.. கடைசில phoneah switch off பண்ணிட்ட.. இன்.."
குணாவுக்கு நா தழுதழுத்தது, வார்த்தைகள் வரவில்லை.  
தான் நடுவீதியில் கத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தான் குணா. அபிராமி சிலை போல் நின்றிருந்தாள். குணா தன் கோபத்தையும் குரலையும் தாழ்த்திக் கொண்டான்,
"இந்த அஞ்சு நாள்ல உனக்கு எத்தனை time call பண்ணிருப்..
ச்சே.. என்னப் பைத்தியம் மாதிரி அலைய விட்டுட்டியே..
வர்ற ஒவ்வொரு 'call 'um நீதான் பண்றயோன்னு எடுக்கறது.. எந்த msg வந்தாலும் நீதான் அனுப்பிருக்கரயோன்னு எடுக்கறது.. நடை பொணமா திரிஞ்ச இந்த அஞ்சு நாளும்..    
நான் எவ்ளோ கஷ்டப் படுவேன்னு, நீ கொஞ்சங் கூட நெனச்சுப் பார்க்கல இல்ல ..? ", குணா தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டான்.

"உன்ன பார்க்காம, உன் முடிவு தெரியாம, இந்த அஞ்சு நாள் நான் பட்ட வேதனை..
இனி என்னால அஞ்சு நிமிஷங்கூட தாங்க முடியாது..
எவ்ளோ நாள் பேசியிருப்போம், பழகியிருப்போம்.. என்ன இன்னும் நீ புரிஞ்சுக்கல...?  நான் உன்கிட்ட propose பண்ணினது அதிர்ச்சியா இருந்துச்சுனு மட்டும் சொல்லாத.. உனக்கு முன்னாடியே நல்லா தெரியும், நான் இததான் செய்யப்போறேன்னு..
நீ இங்க இருக்கறப்ப உன்கிட்ட பேசாம என்னால இருக்கா முடிஞ்சது..
ஆனா நீ ஊர்ல இல்லாதப்ப, உன்ன பார்க்க முடியாம ,பேச முடியாம நான்  ஒவ்வொரு நொடியும் செத்தேன்.."
கொட்டித் தீர்த்தான் குணா. அவள் அசைவேதும் இல்லாமல் குனிந்தவாறே நின்றிருந்தாள்.

" அபி..
நீ இல்லாம, உன்ன பார்க்காம, உன்ன பத்தி நெனைக்காம, என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலடி..
நீ மட்டுந்தாண்டி என் உலகம்...வாழ்க்கை எல்லாமே..
நீ இல்லாம என் வாழ்க்கைய நெனச்சு பார்க்க முடியல..
இதுக்கு மேல என்னால உனக்கு எப்படி புரிய..
உன்ன என் ராணி மாறி.. ப்ச்..", சொல்லிக்கொண்டே குனிந்திருந்த அவள் தலையை நிமிர்த்தினான். அவள் கண்கள் குளமாகியிருந்தது.
"ஏய்.. அபி.."
அவள் அழுதுகொண்டே அவன் மேல் சாய்ந்தாள். குணாவின் சட்டையை இருக்கப் பற்றிக்கொண்டு கதறினாள். குணாவுக்கு தலை சுற்றியது.


காபி டே, இந்திரா நகர்.
சாலை ஓரமாக உள்ள அந்த மேசையில் அமர்ந்திருந்தார்கள் அபியும் குணாவும். 
குணா அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஏன் அப்டி பார்க்கற..?"
"உன் முகத்த  இப்டியே பார்த்துட்டு இருக்கணும் போல இருக்கு..."
"ஏன்..?"
"இந்த அஞ்சு நாளா உன் முகத்த காட்டாம, என்ன எவ்ளோ கஷ்டப்படுத்திட்ட.. "
அவனையே ஆனந்தமாய் பார்த்தாள் அபி.
"உன்ன கஷ்டப்படுத்திட்டு, நான் சந்தோசமா இருந்தேன்னு நெனைக்கறையா??  
நீ அவசரமா அந்த மாதிரி சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி ஆய்டுச்சு.. கோபம் கோபமா வந்துருச்சு..
எனக்கு எப்டி பதில் சொல்றதுன்னு தெரியல..
செல்ல silentla போட்டு போயிட்டேன்; அப்புறம் செல்ல swithoff பண்ணிட்டேன். phonea வீட்லயே விட்டுட்டு ஊருக்கு போயிட்டேன்.
அப்பா கூட கேட்டாரு எங்க phonenu... மறந்து வெச்சுட்டு வந்துட்டேன்னு சொன்னேன்.
ஊர்ல அது இழவு வீடு மாதிரி இல்ல.. ரொம்ப நாளா உடம்பு சரியில்லாம இருந்ததால, அம்மாயி இறந்தது யாரையும் பாதிக்கல.. எல்லோரும் சந்தோசமாத்தான் இருந்தாங்க...
சொந்தகாரங்க எல்லோரும் சிரிச்சு பேச பேச.. எனக்கு உன் ஞாபகம் வர ஆரம்பிச்சுடுச்சு.. 
என்னால அங்க இருக்கவே முடியல.. என்னமோ மாதிரி இருந்துச்சு.. நீ 'chat'ல அனுப்புன அந்த msgum, உன் முகமும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வந்துட்டே இருந்துச்சு. நேரம் போகப் போக என்னால அங்க இருக்கவே முடியல... உன்ன உடனே பார்க்கணும் போல இருந்துச்சு.. 
உண்மைய சொல்லன்னுன்னா உன்கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது, உன் அருமை தெரியல.. அஞ்சு நாள் உன்ன விட நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்..
நான் உன்ன பார்த்த மொத நாள்ல இருந்தே ..
ஏய், நாம எப்போ மொதல்ல மீட் பன்னுநோம்னு ஞாபகம் இருக்கா? "
"அண்ணாச்சி மளிகை கடைல.."
கள்ளத்தனமாக சிரித்தாள், "இல்ல.. அதுக்கு முன்னாடியே உன்ன நான் பார்த்திருக்கேன்.. உன் வீட்டு பால்கனில நீ நின்னுட்டிருந்த.. நீ எதிர் வீடுன்னு எனக்கு அப்பவே தெரியும்.. மொத சந்திப்புல இருந்தே உன் மேல எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்துச்சு... ஆனா நான் காட்டிக்கல..
'பார்த்தவுடனே காதல்'ல எனக்கு நம்பிக்கையே இல்ல.. உன்ன பார்க்கற வரைக்கும்..
எங்க அப்பாவ நெனச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு குணா.. பயங்கர பிரச்னை ஆகும்.. என்னால குடும்பத்த எதிர்த்து எதுவும் பண்ண முடியாது.. ஆனா அத உன் மொகத்த பார்த்து சொல்ல எனக்கு தைரியம் இல்ல.. உன்கிட்ட பேசுனா எல்லாத்தையும் மறந்து சரணடஞ்சுடுவேன்னு எனக்கு நல்லா தெரியும்.. அதனாலதான் நான் உன்ன avoid பண்ண try பண்ணுனேன்.. உன்கிட்ட இனிமேல் பேசவே கூடாதுன்னு நெனச்சேன்..
ஆனா எவ்வளவு தூரம் உன்ன விட்டு விலக நெனச்சேனோ, அவ்வளவு தூரம் நெருங்கி வந்தேன்..
கடைசில நீ ஜெய்ச்சுட்ட..

ஆனா இந்த ஆம்பளைங்களே இப்டித்தான்.. பொய் சொல்வீங்க.. மத்த பொண்ணுங்கள பத்தி எங்ககிட்ட வர்ணிச்சு பேசுவீங்க.. அத நாங்க ரசிக்கணும்.. ஆனா  அதையே நாங்க செஞ்சா உங்கனால தாங்க முடியாது.. பொண்ணு பார்க்க வராங்கன்னு,  நான் சொன்ன ஒரே ஒரு பொய்யக் கூட உன்னால தாங்க முடியலையே, உடனே வெடுச்சுட்டையே..!!"
"தப்புதான்.. நான் அவசரப்பட்டு செஞ்ச அந்த தப்பாலதான், இப்ப நீ எனக்கு கெடச்சு இருக்க.."
சிரித்தாள்.
"பயமா இருக்கு குணா.. பயங்கர பிரச்ன ஆகும் .."
"ஏன் மறுபடியும் அதையே சொல்ற.. கஷ்டப்பட்டு கெடைக்கறதுதான் நிலைக்கும்.. பிரச்னை இல்லன்னா வாழ்க்கை bore அடிக்கும்... 
நாம எவ்ளோ நாள் ஒன்னா அந்த வீதியில பேசிகிட்டு வந்திருக்கோம்.. உங்க அப்பா ஒரு நாள் கூடவா பார்த்திருக்கமாட்டாரு ? அவருக்கு நம்ம விஷயம் அதிர்ச்சியா இருக்காது..
நான் இருக்கேன்ல...என்ன செய்யணுன்னு எனக்கு தெரியும்.. நீ பயப்படாத..
நீ எனக்கு கெடச்ச பொக்கிஷம்..
அவ்வளவு சுலபமா உன்ன விட்டுட மாட்டேன்... "
"ஆனா அவர்..", ஏதோ சொல்ல வந்தவளை கையமர்த்தினான் குணா; மெதுவாக மேசையின் மேலிருந்த அவளின் கரத்தைப் பற்றினான்; ஆறுதலாகப் பார்த்தாள். தன் கையுடன் அவள் கரத்தை நெருக்கமாகக் கோர்த்தான்;  தன் முகமருகே அவள் கரத்தை மெதுவாகக்  கொண்டு வந்தான்; குழந்தை பொம்மையைக் கட்டுவது போல் அவள் கரத்தைக் கண்களில் வைத்து கட்டிக் கொண்டான்; அவளை காதலுடன் பார்த்துக்கொண்டே, அவள் கைகளில் மெதுவாக முத்தமிட்டான். 
குணாவின் மனதில் அந்த பாடல் வரிகள் ஓட ஆரம்பித்தது,

'பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்க்கூட்டில் சரி பாதி உனதே..
உன் இன்பம், உன் துன்பம் எனதே..
என் முதலோடு முடிவானாய் ..
பெண்ணே.. உனை மறந்திட முடியாதே...
உயிர் தருவது சரிதானே..'


 -: இளமை இனிமேல் இனிமையாகட்டும் :-




9 comments:

  1. RASITHADHU:-)
    VERA EVANAVADHU PAAL PAAKET KUDUTHIDUVANO:-)

    PIDITHADHU:-)
    ABIRAMI - GUD NAME SELECTION

    CAN BE IMPROVIZED:-)
    ANDHA MANA MEDAI PEN AND AVAL PERUNDHU OORATHIL ABI.....
    INNUM AZAGA ORU PUNCH KUDUTHIRUKLAM MACHI BZC TATZ DE KNOT....

    RATING:-)
    FIRST ONE ALWAYZ BEST ONE:-)
    DISTINCTION:-)

    ReplyDelete
  2. really a good one..enjoyed reading it..

    ReplyDelete
  3. dai ithu etho real story mari irukku da!!!!!!
    antha guna nee thane?

    ReplyDelete
  4. hmm.. a lil bit angry.. velila solla maattennu sollittu ipdi blog pottu publicity panniteengale.. Hmm.. anyways thnx for the different ending.. blog layavadhu onnu sendhome.. hmm... naan epdi nalaikku office varadhu.. :o :o..

    romba nalla irundhudhu.. :)

    ReplyDelete
  5. Dei hats off for your first time effort. Nalla eluthiirukka. aana ennana sila idangala situation continuity irundhaalum, sentence continuity illa tha mathiri thonudhu, Enakku literature pathi edhuvum threiyadhu, irundhaalum enakku thonuna sila visayangala solrane tappa eduthukadha.

    Sample:(Guna ammandapathaiyae parthavaaru thigaithu nindrinundhaan.) அம்மண்டபத்தையே சில நொடிகள் திகைத்து பார்த்தவாறு நின்றிருந்தான் குணா. (avan mugamo palanaatkal thoongathavan pola kalaipaal vaadi irundhadhu) பல நாட்கள் தூங்கதவன் போல் முகம் களைப்பாய் இருந்தது.
    Subjecta muthala pottu description about the subject apparam kodutha nalla irukkumnu nenaikurane da (Its more of my personal feeling).. May be next time before publishing, ask some one like CSK to comment on your stories. I believe he will give you more inputs than I am. He knows more than me. He is a great writer and I can see you have the potential to write. But tell me the truth who is that girl who impressed you to write something like this??

    -Dheepan.

    ReplyDelete
  6. Thanks da..
    Will try to be more clear from next post..

    ReplyDelete
  7. Bharathi... pinnitta.. ezhuthukkal sooper. aana kathaiyum kaatichigalum konjam palasu maathiri irukku.. Aana ovvoru variyilum puthumai irukku.. sollappattavitham puthumaiyaa irukku.. nalla comedy, kurumbu, kadhal vasanangal irukku.. neraiya idathula paaraattanumnu irukku.. aana konjam(!?) kadhai neelama irukkuranaala neraiya gnabagam varala.. aanaa its really a big attempt. :)
    some suggestions:
    dont be this lengthy..
    climax was so cliche and it was so sudden that it does pull down the momentum.
    be liberal in writing and be strict in its form

    elutha elutha thaan eluthum palagum-nu engo padicha gnabagam.. so keep and keep on writing.. it does not need to be a big story, but a small twisty tale, a small kavithai, a small joke, a small paradox, etc,. everything what u think..

    All the very best.. its simple and brilliant..

    ReplyDelete