
காலை மணி 8.15.
பெங்களுருவின் பழைய விமான நிலைய சாலைப் பகுதியில் இருந்து 2 கி.மீ உள்ளே தள்ளி இருந்த அந்த குறுகலான வீதி இன்று மௌனமாக இருந்தது. வானம் அந்த மௌனத்தை வரவேற்பது போல், பன்னீரை லேசாகத் தூவிக் கொண்டிருந்தது. ஆள் அரவமில்லாத அந்த வீதியின் மயான அமைதியைக் குலைப்பது போலவே ஒரு நாயின் குறைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. வீடுகள் அடர்ந்த நீண்ட அந்த வீதியில், வெளிர் பச்சை நிறத்தில் இருந்த அந்த வீட்டின், முதல் மாடி பால்கனியில் நின்றிருந்தான் குணா (எ) குணசீலன். வீட்டு வாடகையை பொருட்படுத்தாது அங்கு அவன் குடியிருக்க ஒரு காரணம் இருக்கிறது, அது அந்த பால்கனி. சூரியன் உதயம் பார்க்குமாறு அமைந்த அந்த வீட்டில் தெற்குப் புறமாக சாலையை பார்த்தவாறு, அந்த பால்கனி அமைந்து இருந்தது. கதிரவன் எழும் வேளையிலும் மறையும் வேளையிலும் எதையாவது குடித்துக்கொண்டே கொரித்துக்கொண்டே அந்த வீதியை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு மிகப் பிடித்த பொழுதுபோக்கு. அளவில்லாத ஆனந்தத்தைத் தரும் அந்த பால்கனி சில நாட்களாக அவனுக்கு நரகமாக மாறியிருந்தது.
ரொம்ப நேரமாக அந்த வீதியையே முறைத்த படி நின்றிருந்தான் குணா, அவன் முகம் கவலையில் தோய்ந்திருந்தது. தன் கையில் வைத்திருந்த செல்லில் யாரையோ அழைத்தான், பல முறை, பதில் இல்லை. அவன் காதுகளிரண்டும் சிவந்திருந்தது, காய்ச்சல் வந்தது போல் தோன்றியது அவனுக்கு. எதையோ இழந்தவன் போல் அவன் முகம் வெளுத்துப் பொய் இருந்தது, பித்துப் பிடித்தவன்போல் குறுக்கும் நெடுக்குமாக அந்த பால்கனியில் நடந்து கொண்டிருந்தான். ஆபீஸ் கிளம்ப தயாராக இருந்தும், அவன் கிளம்ப மனமில்லாமல் தேங்கி நின்றான், யாரையோ வேண்டி நின்றான். அந்த பால்கனிக்கு அவன் வந்து அரை மணி நேரமாகிறது. உற்சாகமிழந்து, எதிலும் நாட்டமில்லாமல், செய்வதரியாது நின்றிருந்த குணா, காத்திருந்து வெறுத்துப்போய் வீட்டினுள் சென்றான்.
அவனை நினைத்தால் அவனுக்கே வெறுப்பாக இருந்தது; [தேவையில்லாம அவசரப்பட்டுட்டியே டா.. இப்ப எல்லாம் பாழாப் போச்சு..], அவனையே திட்டிக் கொண்டான். அவன் இந்த ஐந்து நாட்களாக அனுபவித்த வேதனையும், வலியும் அவனை வேறு ஆளாக மாற்றி இருந்தது. அவனது கோபமும் வெறுப்பும் அவனிருகண்களில் நீராக கனிந்து இருந்தது, காத்திருப்பின் கொடுமை அவனுக்கு நன்றாகவே புரிந்திருந்தத்து.
ஓவென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அங்கு நிலவிய மயான அமைதி அவன் துக்கத்தை மேலும் துயரப்படுதியது. மேலும் பதினைந்து நிமிடங்கள் கரைந்து மணி 8.30 ஐ தொட்டிருந்த நிலையில், திடுக்கிட்டு நிமிர்ந்தான்.அவனுக்கு மிகப் பரிச்சயமான, பிடித்தமான அந்த ஓசை கேட்டது. இரு கைகளால் தன்னை கவிழ்த்திருந்தவன், அவ்வோசை கேட்டு உற்சாகமாய் எழுந்தான். மின்சாரம் உடலில் பாய்ச்சப்பட்டது போல் இருந்தது அவனுக்கு. ஒரு குழந்தையாக மாறி தாவி பால்கனிக்கு ஓடினான்.
ஓடி வந்தவன் வீதியில் எதையோ தேடினான்; அவன் முகம் மெதுவாக மலர்ந்தது. அவ்வீதியையே நிலைத்துப் பார்க்கலானான்; படபடப்பு குறைந்து நிம்மதி அடைந்தவனாக சுவற்றில் சாய்ந்தான். அந்த காட்சியைப் பார்த்து உறைந்து போய் நின்றவனுக்கு, மெலிதாக உயிர் வந்தது, உணர்வு வந்தது, நினைவு பிறந்தது. சிறிது நேரம் சிலை போல் நின்றவன், யோசனையாய் பைக் சாவியை எடுத்துக்கொண்டு, அவசரமாக வீட்டை தாளிட்டு கீழே ஓடினான். பைக்கினை எடுத்துக்கொண்டு நகர்ந்தான். அவன் கண் முன்னால், அவன் கடந்த காலம் உருண்டு ஓடியது.

நான்கு மாதங்களுக்கு முன்...
"அண்ணாச்சி, பேரன் பொறந்ததுக்கு இன்னும் நீங்க treate கொடுக்கலியே..", அவ்வீதியின் கடைசியில் இருந்த அந்த மளிகை கடையில் ரொம்ப சீரியசா கேட்டுகிட்டு இருந்தான் குணா.
"ம்ம்......அதுங்க தம்பி.. கோழிக்கு ஒடம்பு செரியல.. கண்டிப்பா அடுத்த வாரம் கொடுத்துடலாம்.."
"கோழி என்ன ரத்த தானமா பண்ணப் போகுது..? என்கிட்டயே டபாய்க்கறீங்க பார்த்தீங்களா..
பேரன் படிக்க போனதுக்கு அப்புறம் கூட treat கொடுக்க மாட்டேங்கறீங்களே...
உங்கள நம்புனா பிரியாணி இல்ல... பிரியாணி முட்டை கூட கெடைக்காது.."
"தம்பி.. அடுத்த ஞாயிறு, தண்ணி கேன் போடும்போது மட்டன் பிரியாணியும் சேர்த்து கொண்டு வரேன், போதுமா?"
"அடப் போங்கண்ணா.. இதையே ஒவ்வொரு வாரமும் சொல்லுங்க.. போதும்..
உங்ககிட்ட வெட்டியா பேசி tired ஆகிடுச்சு... வந்த வேலய பார்க்கறேன்..
என்ன recharge பண்ண 6 முட்டை, அரை litre பால் பார்சல் பண்ணுங்க.."
"வெட்சாச்சு.. வேற..?"
"அண்ணா.. அரை லிட்டர் பால் கொடுங்க...", குறுக்கே புதிய குரல் கேட்டது, பெண் குரல்.
குணா ஆர்வமாக திரும்பினான், அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
குணாவுக்கு பார்த்த உடனே 'பக்'கென்று இருந்தது.
[ஐயோ.. எங்கயோ இவள நான் பார்த்திருக்கேனே.. ரொம்ப பரிச்சயமான முகமா இருக்கே... கேட்ரலாமா?], யோசித்துக்கொண்டே நின்றான்.
[நம்ம காலேஜ் ஆ..? இல்லையே.. ஆச்சர்யமா இருக்கே.. எங்கயோ பார்த்திருக்கேன்.. ஆனா எங்கன்னு தெரியலயே...]
"அடடா.. பால் காலி ஆயடுச்சும்மா... "
"ஓ... இங்க பக்கத்துல வேற எங்க கடை இருக்கு..?"
"கொஞ்ச தூரம் நடக்கனும்மா.. நேராப் போய்... லெப்ட் எடுத்து.. அப்புறம்..", அண்ணாச்சி கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கும்போதே.. குணாவின் மண்டையில் மணி அடித்தது.
"அண்ணாச்சி.. இந்த பாக்கெட்ட அவங்களுக்கு கொடுத்துடுங்க.. நான் போய் வாங்கிக்கறேன்.."
"இல்லங்க பரவால்லே...", குணாவிடம் அவள் பேசிய முதல் வார்த்தைகள்.
"இல்லங்க எனக்கொன்னும் problem இல்ல.. வண்டி இருக்கு.. நீங்க எடுத்துக்குங்க..".
அவன் வற்புறுத்தலால் மனம் மாறியவள் போல் அந்த பாக்கெட்டை எடுத்துக்கொண்டு, அவனுக்கு மிக அருகில் வந்து சொன்னாள், "thanksnga..".
கண்கள் நிறைய அவள் பார்த்த அந்த பார்வை, குணாவின் இதயத்தில் இடியாய் இறங்கியது. மிக இயல்பான புன்னகையொன்றை குணாவிடம் வீசிவிட்டு, கடையை விட்டு நகர்ந்தாள். அந்த கருவிழிகள் உதிர்த்த அந்த முதல் பார்வை, குணாவின் பார்வையில் இருந்து மறைய மறுத்தது.
"ஏப்பா.. பொண்ணுங்களப் பார்த்தா மட்டும் உடனே கர்ணனா மாறிடரீங்களே..?", அவனை விட்டு தூரமாகப் போய்க்கொண்டிருக்கும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனை, இடைமறித்தார் அண்ணாச்சி.
"அண்ணாச்சி... தினமும் யாருக்காவது, எதாவது ஒரு ஹெல்ப்பாவது பண்ணனும்னு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க..நீங்க வேனா எதாவது கேளுங்க.. செய்யுறேன்..", தவத்தை கலைத்த அண்ணாச்சியிடம் கடுப்போடு சொன்னான் குணா.
"கடன் சொல்லாம இருந்தாலே போதும்.. "
"நான் உங்ககிட்ட எத்தன டைம் சொல்றது, sodexo பாஸ் accept பண்ணுங்கனு.. கடன் சொல்லாம, வேற என்ன பண்றது.. "
"சோடா கோஸ் ஆ?"
"ம்ம்.. முட்டை கோஸ் .. இந்தாங்க காச புடிங்க.. கடுப்பேத்திட்டு.."
"ஆமா உனக்கு பாலு?"
"ஊத்தரதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?
அதுக்கு.. இன்னும் டைம் இருக்கு...
பாலைத்தான் தார வார்த்தாட்சே..ரெண்டு முட்டைய சேர்த்து கட்டுங்க.."
[மொத மொதலா, பார்த்த உடனே ஒரு பொண்ணு மேல எனக்கு ஈடுபாடு வந்திருக்கு, பீல் பண்ண விடாம, ஓயாம கேள்வி கேட்டு உயிரை எடுக்கரானே இந்த மீசைக்காரன்...], அண்ணாச்சியை மனதில் திட்டி முடிப்பதற்குள், அவன் பார்வையிலிருந்து அவள் மறைந்திருந்தாள்.
மூன்று நாட்கள் விரைந்து கரைந்திருந்தது.
அவளைக் கிட்டத்தட்ட மறந்துபோயிருந்தான், அந்த பார்வையைத் தவிர. office முடிந்து, bus ஸ்டாப்பில் வந்து இறங்கி இருந்தான். mail check பண்ணுவது ஒன்றே வேலையாக இருந்ததால், இன்று ரொம்பவே உற்சாகமாக இருந்தான்.
அவளைக் கிட்டத்தட்ட மறந்துபோயிருந்தான், அந்த பார்வையைத் தவிர. office முடிந்து, bus ஸ்டாப்பில் வந்து இறங்கி இருந்தான். mail check பண்ணுவது ஒன்றே வேலையாக இருந்ததால், இன்று ரொம்பவே உற்சாகமாக இருந்தான்.
எதையோ நினைத்தவாறு சாலையைக் கடந்து மறுபுறம் வந்து கொண்டிருந்தான், கண்ணிமைக்கும் நேரத்தில், அவனை அணைத்தவாறு, அந்த traveller வந்து நின்றது. திடுக்கிட்டு நகர்ந்து நின்றான் குணா. ஒரு நொடி தாமதித்திருந்தாலும், குணாவை மாய்த்திருப்பான். குணாவுக்கு கெட்ட கோவம் வந்தது. உச்சகட்ட கடுப்பில், அந்த டிரைவரை திட்ட ஆரம்பித்தான், சத்தம் துளியும் வெளியே வராமல்.
"Hi", கோவத்தில் சிவந்திருந்த அவன் காதுகளை அந்த வார்த்தை தென்றலாய்த் தீண்டியது, கோவத்தை தனித்தது. திரும்பிய அவன் ஆச்சர்யத்தில் உறைந்து போனான்; மீண்டும் அவள்.
"Hi.. என்ன ஞாபகம் இருக்கா..?", அவள் மீண்டும் கேட்டவுடன், குணாவின் கால்கள் மெல்ல தரையில் இருந்து எழும்பியது.. மெதுவாக மிதக்க ஆரம்பித்தது. அவளை மீண்டும் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
"oh..hi... உங்கள ஞாபகம் இல்லாமயா...?", குணா தன் சந்தோசம் எதையும் வெளிக்காட்டாமல் நிதானமாக சொன்னான்.
சிறு புன்னகையுடன் அவள் கேட்டாள், "சரி... ஏன் என்னோட cabah மொரச்சுட்டு நிக்கறீங்க?"
"அதுவா..அது உங்க cab டிரைவர் என்கிட்டே கடன வாங்கிட்டு, எஸ்கேப் ஆகிட்டே இருந்தான்..இன்னைக்குத்தான் கையும் களவுமா சிக்குனான்..அதுதான்.. நலம் விசாரிச்சுகிட்டு இருந்தேன்.. "
"hallooo.."
"பின்ன என்னங்க.... வண்டி நிறுத்தத்தான ரோடு இருக்கு.. அவன் ரோட்ல வண்டிய park பண்ணாம.. என்மேல park பண்ண பார்த்தான்... அதான் நீங்க இப்ப மொறைக்கற மாதிரியே மொறச்சு அவனுக்கு மங்கள வாழ்த்து பாடிட்டு இருந்தேன்.."
"oh...அந்த ஆளு மேல already நெறைய complaint இருக்குங்க, உங்களுக்கு ஒன்னும் அடி படலையே..", கவலையோடு கேட்டாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லங்க.."
இருவரும் பேசிக்கொண்டே நடக்கலானார்கள்.
சில வினாடி மௌனத்திற்குப் பிறகு, குணா ஆரம்பித்தான்.
"குணா...".
"என்னது?"
"என்னதா? என்னோட பேரு 'குணா'ங்க.." ['ச்சே..மொக்கயாக்கிட்டாளே ..']
"oh அப்டியா.."
"hallo என்ன அப்டியா.. இங்க என்ன கதையா சொல்றேன்...?
சம்பிரதாயப்படி நீங்களும் உங்க பேர சொல்லணுங்க..."
சிரித்துக்கொண்டே சொன்னால், "oh sorrynga.. அபிராமி..".
சிறிது தூரம் மௌனமாக பயணித்தார்கள்... ஒரே பாதையில் ...
குணாவுக்குள் அந்த கேள்வி மண்டையை குடைந்து கொண்டே இருந்தது.. அதைக் கேட்டுவிடுவதென முடிவு செய்தான்.."தப்பா நெனைக்காதீங்க.. நெஜமாலுமே உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...ஆனா எங்கன்னு தெரியல? "
"hallo...இப்டி எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க...", செல்லமாக முறைத்துக்கொண்டே கேட்டாள்.
குணா slow motionil ஒரு விரலை உயர்த்திக் காட்டினான், அவள் சிரித்து விட்டாள்.
[ஐயோ..சிரிக்கிறாளே..!!!!], குதூகலமானான் குணா.
"நீங்க நெறையா சினிமா பார்பீங்களோ?", குணாவிடம் கேட்டாள்.
"தமிழனோட தலையாய பொழுதுபோக்குகள்ள முக்கியமானது, வத்தி வெய்க்கறதும், சினிமா பார்க்கறதும். எனக்கு வத்தி வெய்க்க புடிக்காது.. ஆனா சினிமா பைத்தியம்... "
"கேள்விக்கு நேரா பதில் சொல்ல மாட்டீங்களா ? சுத்தி வலைக்கறீங்க..!"
"என் குணமே அதுதாங்க.. எதையும் நேரா சொன்னா, அதுல சுவாரஸ்யமே இல்லங்க.."
நிறைய பேசினார்கள்.
நேரமும், தூரமும் கரைந்ததே தெரியாமல் பேசிக்கொண்டே வந்ததில், குணாவின் வீடு கண்ணில் தெரிந்தது.
"அபி, உங்க வீடு எங்க இருக்கு..?", உரிமையுடன் கேட்டான்.
"இங்க இருந்து.... தோ.. அதுதாங்க எங்க வீடு..", அவள் சுட்டிக் காட்டிய வீடு, குணாவின் வீட்டுக்கு எதிரில் இருந்து ரெண்டு வீடு தள்ளி இருந்தது.
"hallo... யார டபாய்க்கறீங்க.. இதே ஏரியால நான் ரெண்டு வருசமா இருக்கேன்... உங்கள இங்க நான் பார்த்ததே இல்லையே..?"
"இப்போதான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னீங்க..?!"
"பார்த்து இருக்கேங்க.. ஆனா இங்க இல்ல.. வேற எங்கயோ.. நீங்க உண்மைய சொல்லுங்க.."
"உண்மைதாங்க.. நீங்க பத்து வருசமா இங்க இருந்துருந்தாலும் பார்த்திருக்க முடியாது.. நாங்க இங்க shift ஆகி ஒன்றை வாரந்தான் ஆச்சு.."
"என் பாதி நேரத்த, வீதிய பார்த்துதான் போக்கறேன்... உங்கள பார்க்கவே இல்லையே.."
"hallo.. ஒரே வீட்ல இருந்தாலும், 24 மணி நேரமமும் நீங்க ஒருத்தர பார்க்கறது இல்ல... அதே மாதிரி எதிர் வீட்லயே இருந்தாலும், முதல் சந்திப்பு, முதல் நாள்லயே அமையனுமா என்ன?.."
"என்னங்க சிம்பிள் மேட்டருக்கு இப்டி serial dialoguellam விடறீங்க... என்ன விட ஓவரா பேசறீங்களே.. ஆமா நீங்க sunday கடைக்கு வந்தப்போ, வேற எங்கிருந்தோ வந்தீங்க...?!"
"யப்பா...ஏன் இப்டி வக்கீல் மாதிரி கேள்வி கேட்கறீங்க...? அது எங்க relation வீடு.."
"ம்ம்.... ஆனா..?
சேரி விடுங்க... ஆமா, நீங்க நெஜமாலுமே... அங்கதான் இருக்கீங்களா?", நம்பமுடியாமல் கேட்டான்.
"உங்க மேல சத்தியமா.... போதுமா!!!???"
அதைக் கேட்டதும் குணாவுக்கு ஏதோ ரெக்கை முளைத்த மாதிரி இருந்தது.
உலகமே அவன் விருப்பம் போலவே இயங்கும் சொர்கமாக தோன்றியது.
"போதும்.. போதும்...
இறைவா....... நீ......... இறைவன்...
இருவத்தஞ்சு வருசமா, நீ வாங்கி தின்ன பழத்துக்கும், தேங்காய்க்கும் இன்னைக்குத்தான் உருப்படியா ஒரு வேலையப் பார்த்து இருக்க.. உன்னயெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது.. நல்லா இருப்பய்யா நீ..", மல்லாக்கப் படுத்து வீட்டிற்குள் சிரித்துக்கொண்டு இருந்தான் குணா.
"அய்யனாரே.. அவ சத்தியம் பண்றா.. அதுவும் எம்மேல... அதுக்கு என்ன அர்த்தம்... புரியுதா..??!! அடப்..போங்கப்பா... "
[எங்கடி இருந்த இத்தன நாளா, என் கண்ணுல படாம...
மொத சந்திப்பிலேயே ஒரு பொண்ணுட்ட இவ்ளோ உரிமையோடும் அன்னியோன்யதோடவும் நான் யார்கிட்டயும் பேசுனது இல்ல...எப்டி உன்கிட்ட மட்டும் பேசுனேன்..? என்னமோ போடி..
என்னோட இருவத்தஞ்சு வருஷ தவம், உன்னால பூர்த்தியாகப் போகுது...]
"அகலாது...அணுகாது... உன்னை களவாடப் போகிறேன்..
எனதுயிராக்கப் போகிறேன்...
தயாராகடி அபிராமி... என் அபிராமி...
அங்கங்க மானே.. தேனே..பொன்மானே... இதெல்லாம் போட்டுக்கணும்..."
எழுந்து வெரைப்பாக நடக்க ஆரம்பித்தான்.
"புண்ணியம் செய்தனமே-மனமே-புதுப் பூங் குவளைக்
கண்ணியம் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே. "
தலை கால் புரியவில்லை குணாவுக்கு; தனக்குத்தானே பேசிக் கொண்டிருந்தான். அமாவாசைக்கு நாள் இருந்தும் அவனுக்கு முத்திவிட்டது போல்தான் தோன்றியது. அவள் வீட்டை வில்லத்தனமாக பார்த்தான்... வெள்ளந்தியாக சிரித்தான்.. சரக்கு அடிக்காமலே அவனுக்கு தலையில் மகுடி சத்தம் கேட்டது.
அவன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அவன் நண்பர்கள் யாரும் அவனுடன் இல்லை, அப்படியே இருந்திருந்தாலும் அதை அவனால் விவரிக்க முடியுமா என்று தெரியவில்லை.
laptop ஐ மடியில் எடுத்து வைத்து வேகவேகமாக type செய்தான், "www.orkut.com". புதிய நண்பர்களை தேடும் பகுதியில் type செய்தான்..."அபிராமி".
கொஞ்ச நேரம் அந்த பேரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, 'communities' ஐ click செய்தான், அந்த கல்லூரியின் பெயரை type செய்து, 'search' என்றான். திரையில் தெரிந்த, 'ECE 2008 passout' என்ற அந்த community ஐ வெற்றிப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டே click செய்தான். அந்த communityil, அபிராமியை தேடினான், இரண்டு அபிரமிகள் திரையில் தெரிந்தார்கள்.
முதல் அபிராமி, தான் உலக அழகியென்று ஐஸ்வர்யா ராய் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தாள். இந்த மொக்க பார்ட்டி, அவளாக இருக்க வாய்ப்பே இல்லை என்று அவனுக்கு தெரியும்.
ரெண்டாவது அபிராமி.., அவன் அபிராமிதான்.. சாந்தமான முகத்துடன்.. வசீகரப் புன்னகையுடன்.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு எழுதப்பட்ட 'Testimonials' அனைத்தையும் படித்து முடித்தான்.
'Add as friend' என்ற அந்த 'link'ன் மேல் mouse ஐ வைத்து யோசித்துக்கொண்டே இருந்தான். 'குணா... வேணா.. வண்டி ஓவர் ஸ்பீட்ல போகுது.. மித வேகம்.. மிக நன்று..', அடுத்த கட்ட நடவடிக்கைப் பற்றிய, தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான் குணா.

மறு நாள் காலை.
அந்த எதிர் வீடு அவனுக்கு ரொம்ப புதிதாக தெரிந்தது. அடிக்கடி பால்கனியில் இருந்து, அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அந்த எதிர் வீடு அவனுக்கு ரொம்ப புதிதாக தெரிந்தது. அடிக்கடி பால்கனியில் இருந்து, அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
[ஒரு நாளில் இவ்வளவு நடக்குமா.. கனவு மாதிரி இருக்கே..], அவனால் எதையும் நம்ப முடியவில்லை. அவனுக்குள் பெரிய மாறுதல் நடந்திருப்பதாக தோன்றியது அவனுக்கு. அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்கு மனப்பாடமாக இருந்தது. வீட்டிலிருந்த போதும், ஆபீஸ் போன பின்பும் அந்த வீட்டிலேயே அவன் நினைவு முழுவதும் இருந்தது. அவனுக்கு இன்று வேலை எதுவும் ஓடவில்லை... அடிக்கடி மணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். போட்டு வைத்த திட்டம் ஒவ்வொன்றாக செயலாக்க விரைந்தான்..
சரியாக இரவு 7 மணிக்கு, kemp fort bus stoppil இறங்கி நின்றான். காத்திருக்க ஆரம்பித்தான்.
சாலையின் இருபுறமும் பார்த்துக்கொண்டே மணியை பார்த்தான், 7.05. அருகில் உள்ள இளநீர் கடையில் ஒரு இளனியை வாங்கி குடிக்க ஆரம்பித்தான். மணி இரவு 7.15 ஆகி இருந்தது, பாதி இளநீர் மிச்சமிருந்தது, பொறுமையின் எல்லையை அவன் தொட்டிருந்த நிலையில், அந்த cab அவனுக்கு அருகில் வந்து நின்றது, அதே cab.
அவன் படபடப்பு அதிகமானது; அவன் சுவாசித்து விடும் காற்றின் வெப்பத்தில், பெங்களுரின் வெப்பநிலை 2 டிகிரி கூடுவது போல் இருந்தது. அந்த வண்டியையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். வண்டியிலிருந்து ஒவ்வொருவராக மெதுவாக இறங்கினார்கள். குணாவால் பொறுமையாக இருக்க முடியவில்லை, அனைவரயும் தள்ளி விட்டுவிட்டு உள்ளே போய் பார்த்துவிட வேண்டும் போல இருந்தது. கடைசியாக, நிதானமாக குணாவின் கண் முன்னால் தோன்றினாள் அபிராமி. வெள்ளை நிற சுடிதாரில் தேவதை போலிருந்தாள். குணா அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
வண்டியை விட்டு இறங்கிய அபிராமி சுற்றும் முற்றும் பார்த்தாள்; குணாவைப் பார்த்து விட்டாள். குணாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அவன் படபடப்பு மேலும் அதிகமானது. குணாவைப் பார்த்தபடியே அருகில் நெருங்கி வந்தாள்; குணா அவள் பார்வையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அடிக்கடி வேறு எங்கோ பார்த்துக்கொண்டான்.
குணாவின் அருகில் வந்து அவள் சொன்னாள், "ஹலோ குணா..", அவன் செத்துப் பிழைத்தான். நேற்றுப் பிறந்த குழந்தை போல சிரித்தான்.
"ரொம்ப health conscious oh..", மீண்டும் கேட்டாள்.
[அடிப் பாவி.. ஒரு இளனிய வாங்கி, அரை மணி நேரமா குடிச்சுகிட்டு இருக்கேன். என்னப் போய் health conscious ah ..னு கேட்கறியே..!! இந்த ரெண்டு நாளா என் conscious full ah.. உன்ன சுத்திதான் இருக்குடி கள்ளி...!!!], தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தான்.
"எப்பவாவது குடிப்பங்க.. போலாமா?"
"போலாமே.."
இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.
அவர்களின் புதிய பாதை உதயமானது.
"நீங்க வண்டி வெச்சு இருக்கீங்கல்ல..? ஆபீஸ் மாரதல்லிலதான.. வண்டிலேயே போயிட்டு வல்லாமே.."
"போலாம்... ஆனா வண்டிதான் என்கிட்டே இல்ல.."
"ஏன் என்னாச்சு?"
"என் friend வேல தேட bangalore வந்து இருக்கான். அவனோட அண்ணன் வீட்டுல இருக்கான். அவனோட அண்ணா family man. அவர்ட்ட கேட்க கூச்சப்பட்டுட்டு எங்கிட்ட கேட்டான். two wheeler இருந்தா அடிக்கடி interview போக ரொம்ப வசதியா இருக்கும், அப்டியே bangaloreayum தெரிஞ்சுகிட்ட மாதிரி இருக்கும்னு கேட்டான். சேரி எனக்குத்தான் ஆபீஸ் cab இருக்கு, goverment விட்ட பஸ் நெறைய இருக்குனு சொல்லி கொடுத்துட்டேன். இன்னும் ரெண்டு வாரத்துல வந்துரும்.."
"oh very good", சின்ன சந்தேகத்துடனும் நிறைய ஆச்சர்யத்துடனும் அவள் பாராட்டினாள்.
"ஏங்க.. உங்க companyla இப்போ javala opening இருக்கா? 4 year exp"
"இருக்குங்க...ஏன் company மாறப்போறீங்கள?"
"எனக்கில்லைங்க.. என்னோட college friendukku... "
"resume அனுப்பி விடுங்க.. நான் forward பண்ணுறேன்.."
"உங்க email id சொல்லுங்க..", எழுதிக்கொள்ள பேகினில் எதையோ தேடினான். பேனா எதுவும் கிடைக்காதவன் போல்,
"எனக்கு ஞாபக மறதி அதிகம்... உங்க gmail id..ya.. sms பண்றீங்களா ?"
"செரி, number சொல்லுங்க..."
உள்ளூர சிரித்துக்கொண்டே நம்பரை சொன்னான் குணா.
sms வந்து சேந்தது. பயணம் தொடர பாதை உருவானது!!
குணா மர்மப் புன்னகையை அவளிடம் உதிர்த்துக்கொண்டே அவன் வீட்டினுள் நுழைந்தான். எதையோ சாதித்துவிட்டது போல் இருந்தது அவனுக்கு. ஒரு மாதிரி திமிர் கலந்த ஆனந்தத்தோடு பேகை வீசிவிட்டு, வீட்டின் பின்புறக் கதவை திறந்தான். இருள் கவ்வியிருந்த அந்த படிகள் வழியாக கீழே இறங்கினான்.
விளக்குகள் ஏதும் இல்லாமல் அந்த இடம் இருளில் மூழ்கி இருந்தது. குணா தன் செல்லை எடுத்து கீ-பேடை unlock செய்தான். சிறிது வெளிச்சம் வந்தது. செல்லைத் தூக்கிப் பிடித்து தூரத்தில் இருப்பதை பார்க்க முயன்றான். பெரிய உருவத்தில் மங்கலாக ஏதோ தெரிந்தது.
பெரியதான சாம்பல் நிறப் போர்வையுடன் அது உறங்கிக் கொண்டு இருந்தது. முன் பகுதியில் இருந்து அந்த போர்வையை தலை தெரியுமளவுக்கு மேலே தூக்கினான் குணா; அங்கே அவன் பல்சர் பல்லைக் காட்டி நக்கலாக சிரித்துக்கொண்டு இருந்தது. குணா வில்லன் போல் பார்த்தான்; திமிராகச் சிரித்தான்.
விளக்குகள் ஏதும் இல்லாமல் அந்த இடம் இருளில் மூழ்கி இருந்தது. குணா தன் செல்லை எடுத்து கீ-பேடை unlock செய்தான். சிறிது வெளிச்சம் வந்தது. செல்லைத் தூக்கிப் பிடித்து தூரத்தில் இருப்பதை பார்க்க முயன்றான். பெரிய உருவத்தில் மங்கலாக ஏதோ தெரிந்தது.
பெரியதான சாம்பல் நிறப் போர்வையுடன் அது உறங்கிக் கொண்டு இருந்தது. முன் பகுதியில் இருந்து அந்த போர்வையை தலை தெரியுமளவுக்கு மேலே தூக்கினான் குணா; அங்கே அவன் பல்சர் பல்லைக் காட்டி நக்கலாக சிரித்துக்கொண்டு இருந்தது. குணா வில்லன் போல் பார்த்தான்; திமிராகச் சிரித்தான்.
மறுநாள்.
அவனுக்கு எந்த வேலையையும் ஓடவில்லை. கடந்த சில நாட்களாக வெட்டியாக இருந்து பழகி விட்டதால், எதையும் வேகமாக செய்ய முடியவில்லை. அபிராமிக்கு துளியும் சந்தேகம் வராமல், எப்டி சந்தர்ப்பங்களை உருவாக்குவது என்று மட்டுமே அவனுக்கு யோசனைகள் தோன்றியது, வேலையில் எந்த நாட்டமும் வரவில்லை. ஆனால் இன்று குணா தப்ப முடியாது.. இன்றுக்குள் என்னென்ன செய்து முடிக்க வேண்டும் என்று அவன் lead பட்டியலிட்டுக் கொண்டிருந்தான். எதற்க்கெடுத்தாலும் பேசியே காதைக் கடிக்கும் அவன் டீம் lead, இன்று அவன் தலையில் ஏறி உட்காந்து இருந்தான். [செ... இந்த பயபுள்ளைக சப்பாத்தியும் உருளைக் கிழங்கையும் தின்னுட்டு அவங்க ஊர்லையே குப்ப கொட்டாம.. இங்க வந்து சப்பாத்திக்கு பதிலா என்ன உருட்டரானுகளே.. யோவ்... வளந்து கெட்டவனே..வெளிய வருவீல்ல நான் யாருன்னு காட்டறேன்.. உனக்கெல்லாம், செய்வனை வெச்சதான் என் வழிக்கு வருவே.. ], உள்ளுக்குள் திட்டிக் கொண்டே இருந்தான். அடிக்கடி அவன் கண் முன்னால் அபிராமி தோன்றி சிரித்தாள். அவள் நினைவு அவனை விட்டு அகலவே இல்லை.
அவன் எவ்வளவு முயற்சித்தும் 6.30 மணிக்குள் வீட்டுக்கு கிளம்ப முடியவில்லை.
மணி 6 .50 ஐ தொட்டு விட்டது, இதற்குமேலும் அவனால் அங்கு உட்கார முடியவில்லை. வேகவேகமாக கிளம்பி, பஸ் ஐ பிடிக்க சாலைக்கு வந்தபோது அங்கு இன்னொரு பிரச்சினை காத்திருந்தது. வாகனங்கள் அனைத்தும் ரஜினி படத்துக்கு டிக்கெட் வாங்க நிற்பதுபோல், சாலை முழுவது ஆக்ரமித்திருந்தது, full traffic jam. [ஆகா.. இன்னைக்கு ஊரு ஒன்னுகூடிருச்சு போல இருக்கே...7 மணிக்குள்ள kemp fort போக முடியாதே... நமக்கு ஒரு figure செட் ஆகுறது, ஊர்ல பல பேருக்கு புடிக்கல போல இருக்கே..!!], செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தான்.
பஸ்ஸில் அவனுக்கு பல யோசனைகள் தோன்றியது. [பேசாம call பண்ணி எங்க வந்துட்டு இருக்கேன்னு கேட்கலாமா...? ச்சே..ச்சே.. அலையரான்னு நெனச்சாலும் நெனச்சுடுவா... விட்டுப் புடிப்போம்.. நம்மள கொஞ்ச நாள் அவ miss பண்ணனும், அப்போதான் நம்ம அருமை அவளுக்கு தெரியும்.. அய்யய்யோ இந்த 'gap'ல, வேற எவனாவது பால் பாக்கெட் வாங்கி தந்துட்டான்னா??? ச்சே.. அப்டியெல்லாம் நடக்காது.. நம்ம மேல அவளுக்கு கொஞ்சம் interest இருக்கற மாதிரி தெரியுது.. தைரியமா இருடா குணா.. அவ உனக்குத்தான்.. நீ அவளுக்குத்தான்.. ஆனா இந்த சாயந்தரம் கடலை போடுறது நமக்கு ஒத்துவராது போல இருக்கே.. பேசாம வளோட காலைல நடக்க வேண்டியதுதான்... அத நாளைக்கே ஆரம்பிச்சுட வேண்டியது தான்.. ஆனா இன்னைக்கு பேச முடியாம போச்சே..], பஸ்ஸில் யோசித்துக்கொண்டே வந்ததில் சிறிது களைப்படைந்திருந்தான்.
மணி 7 .35.
பஸ்ஸை விட்டு இறங்கி total mall அருகே வந்தவன், அவள் தினமும் இறங்கும் இடத்தை, சாலையின் மறுபக்கத்தில் இருந்து ஆவலோடு பார்த்தான், 'அவள் ஒருவேளை தனக்காக அங்கு காத்திருப்பளோ' என்ற நப்பாசையில். பஸ்களும் கார்களும் போகும் வேகத்தில் அவனால் சாலையின் மறுபக்கத்தில் எதையும் சரியாக பார்க்க முடியவில்லை. கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்கள் அப்படியே விரிய ஆரம்பித்தது. அங்கேயே எகிறி குதிக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. பரவசம் அவனைத் தொற்றிக் கொண்டது.
பஸ்ஸை விட்டு இறங்கி total mall அருகே வந்தவன், அவள் தினமும் இறங்கும் இடத்தை, சாலையின் மறுபக்கத்தில் இருந்து ஆவலோடு பார்த்தான், 'அவள் ஒருவேளை தனக்காக அங்கு காத்திருப்பளோ' என்ற நப்பாசையில். பஸ்களும் கார்களும் போகும் வேகத்தில் அவனால் சாலையின் மறுபக்கத்தில் எதையும் சரியாக பார்க்க முடியவில்லை. கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த அவன் கண்கள் அப்படியே விரிய ஆரம்பித்தது. அங்கேயே எகிறி குதிக்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. பரவசம் அவனைத் தொற்றிக் கொண்டது.
லேசாக, ஓடும் பேருந்துகளுக்கு இடையிலான வெளியில் இளநீரும் கையுமாக அவள் தெரிந்தாள். யாரையோ எதிர்பார்த்து நின்றிருந்தாள்; சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். விட்டு விட்டு தெரிந்த அவள், யாரையோ விடாமல் தேடுவதை பார்த்து அவன் மெய் மறந்து நின்றான்; அந்த தவிப்பைப் பார்த்து ரசித்தான். குணாவின் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது, அதை வெளியில் துளியும் காட்டாமல், மிக நிதானமாக சாலையைக் கடந்தான்.
அவள் அருகே போய் நின்றான். அவன் அருகில் வரும்வரை, அவனை கவனிக்கவேயில்லை அவள்.
"Hi.. அபி.."
"hey ... hallo..", திடுக்கிட்டு திரும்பிய அவள் முகத்தில் ஆனந்தம் தெரிந்தது.
"என்ன.. இன்னைக்கு சீக்கிரம் வந்துடீங்களா..?
யாருக்காவது வெயிட் பண்றீங்களா ?", அவளை சீண்டிப் பார்த்தான் குணா.
"இல்லங்க இன்னைக்கு வர கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.. என் friend ஒருத்தி வீட்டுக்கு வரேன்னு சொன்னா.. அவளுக்குத்தான் waiting.. இன்னும் வரல..call பண்ணுனாலும் எடுக்க மாட்டேங்கறா ..", அவள் சொல்லி முடிக்கும் முன்பே குணாவின் முகம் ஏமாற்றத்தில் வெளிறிப் போனது.
[ச்சே.. கவுத்துட்டாளே...எனக்காக ஒருத்தி காத்திருக்கானு சந்தோசப்பட்டேனே.. ப்ச்.. இந்த பொண்ணுங்களே இப்படிதான் எஜமான்.. ], உள்ளுக்குள் புலம்பினான்.
"oh.. அப்டியா.. சேரி அப்... அப்.. ச்சே.. அப்பா நீங்க வர late ஆகுமா?", அந்த கேள்வியை கேட்க தடுமாறினான்.
சிறிது யோசித்தாள். "இல்லங்க.. wait பண்ணி bore அடிக்குது.. போலாம் வாங்க.. அவ வந்தா call பண்ணட்டும்.."
[யப்பா அய்யனாரே... உன் புள்ளைய காப்பத்திட்டப்பா...], உற்சாகமாக கிளம்பினான் குணா.
"resume அனுப்பிட்டேன்க.."
"எதுக்கு?", குழப்பமாக கேட்டான்.
"ஹல்லோ..? எதுக்கா? உங்க friendukku வேல வேணாமா? gmailukku அனுப்பி இருந்தீங்களே..!!"
"oh..அந்த resume .. ah .. ok.. thanksnga.."
"ஏங்க பைக் இல்லாம ஆபீஸ் போயிட்டு வர சிரமமா இல்லையா?"
[அய்யய்யோ.. மறுபடியும் பைக்கா..!! நம்ம வாயிலிருந்தே உண்மைய வர வைக்காம விடமாட்ட போல இருக்கே..!! ]
"சிரமந்தாங்க.. இன்னும் 2 வாரந்தானே.. friendukkaga ஒரு வண்டி கொடுத்துகூட ஹெல்ப் பண்ணலன்னா, எப்டி?"
ஆச்சர்யமாகப் பார்த்தாள். அவள் தனது இதழ்களை சுழித்தவாரே சொன்னாள், "பெரிய ஆளுங்க நீங்க... 'வானத்தை போல' விஜயகாந்தவிட பெரிய வள்ளலா இருப்பீங்க போல.."
அவள் உதடுகள் சுழித்த சுழியில்,சொக்கிப் போனான் குணா.
"ரொம்ப புகழாதீங்க.. எனக்கு புகழ்ச்சி புடிக்காது.. ஏதோ என்னால முடிஞ்ச உதவிகள என்னையே நம்பி இருக்கற ஏழைகளுக்கு செய்யறேன்.. அவ்வளவுதான்.. "
"ஷ்சப்ப்பா.. முடியல.. தெரியாம சொல்லிட்டேன்.. மன்னிச்சு.. "
"அந்த பயம் இருக்கட்டும்.. இனி பைக்க பத்தி பேசுவீங்க.."
மறு நாள் காலை.
அன்று வெகு சீக்கிரம் எழுந்து தயாராகி விட்டான். 'when are you starting?' என்று type செய்து 'செல்லம்' என்று பதிவு செய்யப்பட்டிருந்த அந்த எண்ணுக்கு sms அனுப்பினான்.
அன்று வெகு சீக்கிரம் எழுந்து தயாராகி விட்டான். 'when are you starting?' என்று type செய்து 'செல்லம்' என்று பதிவு செய்யப்பட்டிருந்த அந்த எண்ணுக்கு sms அனுப்பினான்.
பத்து நிமிடங்கள் ஆகியும் பதில் வரவில்லை. அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த திட்டத்தை கைவிட்டான். வேலைக்கு அன்று சீக்கிரமே சென்று விட்டான்.
[அவளை தேவையில்லாமல் தொந்தரவு செய்ரமோ..??!! ஒரு வேல நம்ம எண்ணத்த கண்டுபிடிச்சு உசாராகிட்டாளா? ஒரு வேல நம்மள பத்தி தப்பா நெனச்சிருப்பளோ? அப்டி நெனச்சிருந்தா என்ன பண்றது?
ஒன்னும் பயப்படாத குணா.. ரெண்டு நாள் கண்டுக்காம விட்டன்னா அவ எல்லாத்தையும் மறந்துடுவா.. அப்புறம் நீயும் அவளுக்கு புதுசா தெரிவ.. அவளும் உனக்கு புதுசா தெரிவா..
நம்மள நாமே புதுப்பிச்சுக்க சின்ன சின்னப் பிரிவுகள்தான் ஒரே வழி..!!], சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருந்தது.
[அவளை தேவையில்லாமல் தொந்தரவு செய்ரமோ..??!! ஒரு வேல நம்ம எண்ணத்த கண்டுபிடிச்சு உசாராகிட்டாளா? ஒரு வேல நம்மள பத்தி தப்பா நெனச்சிருப்பளோ? அப்டி நெனச்சிருந்தா என்ன பண்றது?
ஒன்னும் பயப்படாத குணா.. ரெண்டு நாள் கண்டுக்காம விட்டன்னா அவ எல்லாத்தையும் மறந்துடுவா.. அப்புறம் நீயும் அவளுக்கு புதுசா தெரிவ.. அவளும் உனக்கு புதுசா தெரிவா..
நம்மள நாமே புதுப்பிச்சுக்க சின்ன சின்னப் பிரிவுகள்தான் ஒரே வழி..!!], சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருந்தது.
நேரம் மதியம் 3.30, ஏதோ மும்முரமாக அவன் வேலை செய்து கொண்டிருக்கையில், அந்த sms வந்தது. 'sorry guna. i was rushing to bus stop when i received your msg. morning is always hectic as i have to travel 16 kms. when are u starting in the evening..?'.
உலகத்தையே தன் கையில் அடக்கியவன் போல் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கையில் சாய்ந்தான்.
நாட்கள் சென்றது, பாதை நீண்டது, இடைவெளி குறைந்தது.
அவளுடன் பேசாமல் இருந்த நாட்கள் என்று எதுவுமில்லை. எவ்வளவு பேசியும் அவனுக்கு அலுக்கவில்லை.. வார்த்தைகளை தேட வேண்டிய அவசியமில்லை.. மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை...
அவளுடன் பேசாமல் இருந்த நாட்கள் என்று எதுவுமில்லை. எவ்வளவு பேசியும் அவனுக்கு அலுக்கவில்லை.. வார்த்தைகளை தேட வேண்டிய அவசியமில்லை.. மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை...
இன்று வழக்கத்தைவிட மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தார்கள். அவன் இயல்பான பேச்சு இன்று வேறு பரிணாமத்தை அடைந்திருந்தது.
"எனக்கு ரொம்ப நாளா பொண்ணுங்கள பத்தி ஒரு கேள்வி.. தப்பா நெனைக்காதீங்க.. எப்ப பார்த்தாலும் fridgeல வெட்ச தக்காளி மாதிரி பிரெஷ் ஆவே இருக்கீங்களே, அது எப்டி? சரி மத்த பொண்ணுங்கள விடுங்க.. நீங்க எப்டி எப்பவும் இப்டி?"
சின்ன வெட்கத்துடன் சிரித்தாள்.
"ஹலோ.. அப்டியெல்லா இல்ல... சும்மா பொய் சொல்லாதீங்க.."
"அட உண்மையாங்க.. உங்கள காலைல பார்க்கும்போதும் சரி.. இப்பவும் சரி.. கொஞ்சங்கோட tiredness தெரியாம எப்டி இப்டி இருக்கீங்க..? சான்சே இல்லங்க.. போய் திருஷ்டி சுத்தி போடுங்க..".
அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது. பாதி வெட்கமும் மீதி ஆனந்தமுமாக புன்னகைத்தபடி ஒரு பார்வை பார்த்தாள்.
குணா சிலையானான்.
[ஐயோ... முடியல.. சரக்கு அடிக்காமலே போதை ஏறுதே.. ஒரு பொண்ண வெட்கப்பட வெச்சுட்டியே குணா... கலக்கறடா..!! ], உள்ளே குதூகளித்தான். அவளின் அந்த சிரிப்பு அவனை என்னமோ செய்தது.
"நீங்க என்ன ஓட்டறீங்க..!!", வார்த்தைகளை தேடிக் கண்டுபித்து சொன்னாள்.
"பெரிய புத்திசாலிங்க நீங்க.. correct ah கண்டுபுடிச்சுடீங்க.. "
"ஏய்..", என்று சொல்லிக் கொண்டே அவனை அடிக்க முனைவதுபோல் கையை ஓங்கினாள்.
"அய்யய்யோ.. கொல்றாங்களே.. ஒரு ஸ்மார்ட்டான பையன அடிக்க வராங்களே.. இத கேட்க இந்த ஊர்ல நாதியே இல்லையா...?! "
"ஏய்.. ஏன் கத்தி ஊர கூட்ரீங்க..!? "
"நான் கத்த கூடாதுன்னா, நீங்க ஒரு உண்மைய ஒத்துக்கணும்."
"என்னாதது..."
"நான் 'smart 'ah இருக்கேங்கற உண்மைய.. "
"அப்ப நீங்க எத்தன ஊர வேணாலும் கூட்டுங்க.. இந்த மாறி பச்சை பொய்ய என்னால ஒத்துக்க முடியாது.. "
"ச்சேய்.. குணா.. வாயக்குடுத்து இப்டி புண்ணாக்கிக் கிட்டயேடா..."
"சரி.. சரி.. அழாதீங்க.. ஸ்மார்டாதான் இருக்கீங்க.. போதுமா.."
"போதும்.. இந்த விளையாட்ட இப்பவே நிறுத்திக்குவோம்.."
"ஹலோ.. உண்மையத்தாங்க சொல்றேன்.. நானே கேட்கனுன்னு நெனச்சேன்.. ஆளே மாறிட்டீங்க.. getup அடிக்கடி மாத்திட்டே இருக்கீங்க.. என்ன விஷயம்? "
[எல்லாம் உனக்க்காகத்தாண்டினு சொல்ல எனக்கு ஆசைதான்.. ஆனா நீ என்ன சொல்லுவேன்னு தெரியலையே..]
"அதெல்லாம் ஒன்னு இல்லீங்க.. ", அவள் மீண்டும் தன்னை வற்புறுத்த வேண்டும் என்பதற்க்காகவே குரலை தாழ்த்தி சொன்னான்.
அவன் நினைத்தபடியே, அவள் வற்புறுத்தலானாள் . பலமுறை கேட்டாள்.
"சும்மா சொல்லுங்க..
என்கிட்டே சொல்ல மாட்டீங்களா..!? "
"சும்மா சொல்லுங்க..
என்கிட்டே சொல்ல மாட்டீங்களா..!? "
".. நீங்க கேட்டு சொல்லாமயா.."
"அப்டி வாங்க வழிக்கு.."
"சரிங்க.. அவளுக்காகதான் இதெல்லாம் பண்றேன்.. "
" 'அவ'..ன்னா யாரு?"
"யாரோ.." [நம்மளையே.. வெட்கப்பட வேட்சுட்டாலே..!!]
"ஹலோ.. சொல்லுங்க.. அவ எப்டி இருப்பானாவது சொல்லுங்க.. எதாவது 'hint' ஆவது கொடுங்க.."
"அப்டிங்கரீங்களா..
அவங்க family இருக்கறது கர்நாடகா.. ஆனா நல்லா தமிழ் பேசுவா.. அவ பூர்வீகம் தமிழ்நாடு தான். "
அவங்க family இருக்கறது கர்நாடகா.. ஆனா நல்லா தமிழ் பேசுவா.. அவ பூர்வீகம் தமிழ்நாடு தான். "
அபிராமியின் முகத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் தெரிந்தன.. அவைகளை மேலும் அதிகப் படுத்துவதென முடிவு செய்தான்.
"அவ...", அவன் சொல்ல வாயெடுக்கும்போதே..
"விண்ணை தாண்டி வருவாயா பார்த்துட்டீங்களா ?"
"பார்த்துட்டேன்.. ஏங்க? "
"ஒன்னும் இல்ல சும்மாதான் கேட்டேன்.."
[ஆகா.. நம்ம ரூட்ட கண்டுபிடிச்சுட்டா போல இருக்கே...!!], குணா உசாரானான்.
"எங்க கம்பெனி.. அடிக்கடி 'cab'ல ஒன்னா போவோம்.."
"ஓ..", அவள் லேசாக ஏமாற்றம் அடைவது போல் தோன்றியது. அவள் முகம் மாறுவதை கவனித்த குணா இனியும் அவளை இம்சிக்கக் கூடாதென முடிவு செய்தான்.
"என்ன ஓ.. அவளுக்காக உருகி உருகி ஒரு கவிதை எழுதி இருக்கேன் கேளுங்க.."
"அப்டியா..சொல்லுங்க..", ஆர்வமானாள்.
குரலை செருமிக்கொண்டு ஆரம்பித்தான்.
"கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்..
கன்னி உன் மறு வீடு தென்னகமாகும்...
என் உயிரே வ.."
"நிறுத்துங்க.. நிறுத்துங்க.. சொந்தமா எதையும் யோசிக்க மாடீங்களா!!"
"நீங்க சொல்லிடீங்க.. யோசிச்சு பாருங்க.. எவ்வளவு குஷ்டம்னு உங்களுக்கு புரியும்.."
"சரி இந்த கவிதைய அந்த பொண்ணுட்ட சொன்னீங்களா?"
"சொன்னேன்.. ", இழுத்தான்.
"என் இழுக்கறீங்க என்ன ஆச்சு ?", ஆர்வமாகக் கேட்டாள்.
நல்லா ரசிச்சு கேட்டுட்டு..., 'ரொம்ப நல்லா இருக்குங்க அண்ணா...'ன்னு.. சொல்லிட்டு போயிட்டே இருந்தா .."
அவள் எல்லாத்தையும் மறந்து சிரித்துவிட்டாள்.
காலையில் வீதியில் நடக்கையில் கண்களால் பேசுவதும், மாலையில் அவளை சிரிக்க வெய்ப்பதும், சேர்ந்து சிரிப்பதும், இரவில் செல்லிலும், 'chat'டிலும் மாறி மாறி செல்ல சண்டை போடுவதுமாக மூன்றரை மாதங்கள் இன்பமயமாக கழிந்திருந்தது.
அதிக நெருக்கம், நிறைய புரிதல், சிறிய பிரிவுகள் என வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்க ஆரம்பித்திருந்தான் குணா.

அன்று குணா அதீத படபடப்புடன் இருந்தான்.
மூன்று நாள் பிரிவுக்குப் பிறகு அவளை இன்று சந்திக்கப் போகிறான்.
மூன்று நாள் பிரிவுக்குப் பிறகு அவளை இன்று சந்திக்கப் போகிறான்.
அணுதினமும் அவள் நினைவே ஆக்கிரமித்திருந்த அவனுக்கு, அந்த திடீர் பிரிவு, நரகமாக இருந்தது. அவளுடன் பழக ஆரம்பித்ததிலிருந்து இது போன்றதொரு நீண்ட பிரிவை அவன் இதற்க்கு முன்னால் சந்திக்கவில்லை. அந்த மூன்று நாட்களும் ரொம்பவே நீளமாக இருந்தது. 'அவள் ஊரில் இல்லை.. இன்று பேச முடியாது..', என்ற உண்மை நினைவில் வரும்போதெல்லாம் வாழ்க்கை வெறுப்பாக இருந்தது. அந்த தவிப்புக்கு விடுதலை கிடைக்கப் போகிறது இன்று, அவள் ஊரிலிருந்து வந்துவிட்டாள். அவளுடன் பேசாமல், மாலை வரை பொறுமையாக இருக்க அவனால் முடியவில்லை, 'chat'ஐ துவங்கினான்.
"அபி..எப்ப வந்த?"
"hey குணா...காலைலதான்..."
"காலைல எப்போ ஆபீஸ் கெளம்புன?"
"travel tiredla தூங்கிட்டேன் :) lateathan கெளம்பினேன்."
"ஓ.. எப்டி இருக்காங்க அம்மாயி?"
நீண்டுகொண்டே போனது உரையாடல்.
"செரி.. weekend என்ன பண்ணுன?"
" ): "
"ஏய்.. என்ன ஆச்சு?"
"weekend செரி மொக்க அபி.. நீ இல்லாம செரி bore.."
"ஏய்ய்ய்.. அனுஷ்காவ பார்க்க சிங்கம் போறன்ன..?"
"எங்கயும் போகல... எனக்கு எதுவுமே புடிக்கல அபி.. உன்ன சீக்கிரம் பார்க்கணும்.. நீ இல்லாம இந்த மூணு நாள் எனக்கு ரொம்பவே வெறுமையா இருந்துச்சு அபி.. ரொம்பக் கொடுமை...
உனக்கு phone பண்ணலாம்னுகூட யோசிச்சேன்.. ஆனா நல்லா இருக்காதுன்னு விட்டுட்டேன்..", மனதில் பட்டதை மறைக்காமல் சொன்னான் குணா. உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்தான்.
மறுபுறம், பதில் சிறிது தாமதமாக வந்தது.
"ஏய்ய்.. 'K டிவி'ல எதாவது மொக்க படத்த பார்த்துட்டு, அந்த dialogueah இங்க விடறியா..?"
குணாவுக்கு அந்த பதில் பெருத்த ஏமாற்றமாக இருந்தது, ஆனால் அவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை .
" :) :) :)
உண்மையா.. நேத்துக் கூட பரவால்ல.. நீ இன்னைக்கு வதுடுவேன்னு கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு..
ஆனா இந்த weekend இருக்கே.. ரொம்பக் கொடுமை.. நான் தனியா தங்கி இருக்க கூடாதுன்னு அப்போதான் feel பண்ணுனேன்.. பைத்தியமே புடிக்கற மாதிரி இருந்துச்சு.."
அவளிடம் இருந்து நினைத்த மாதிரி பதில் இல்லை. பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
குணா பொங்கித் தள்ளினான், அவள் என்ன நினைப்பாள் என்பதைப் பற்றியெல்லாம் அவன் துளியும் கவலைப்படவில்லை, தன் மனதில் இருப்பதை அப்படியே அவளிடம் புலம்பித் தள்ளினான். அவளிடமிருந்து ஆறுதலான அன்பான பதில்களை எதிர்பார்த்தான்; மாறாக அலட்சியமான பதில்களே வந்தது.
குணா எவ்வளவுதான் உணர்ச்சிவசப்பட்டு பேசினாலும், அவள் நிதானமாகவே பேசினாள். இந்தப் பிரிவு அவனுக்கு நெறைய பாடத்தையும் கூடவே பயத்தையும் சேர்த்துக் கொடுத்திருந்தது. எவ்வளவு புலம்பியும் பிடிகொடுக்காத அவளது நிதானம் குணாவை ரொம்பவே அசைத்துப் பார்த்தது. [ஒரு வேளை அவள் நம்மள விரும்பலையோ..?], என்று மெலிதாக ஒரு சந்தேகம் அவனுக்குள் துளிர் விட ஆரம்பித்தது; அதை அவனால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு பழைய உரையாடல்கள் அனைத்தும் ஞாபகம் வர ஆரம்பித்தது; அவள் ஒரு போதும் வார்த்தைகளில் எல்லை மீறியதில்லை. குணாவுக்கு பயம் அதிகமானது.
தனிமை அவனை பாழக்கியது. சந்தேகம் அவனுடன் விளையாட ஆரம்பித்தது; ஒவ்வொரு முறையும் புது சந்தேகம் முளைத்தது. எவ்வளவு தூரம் அவள் தனக்குத்தான் என்று நம்பியிருந்தானோ, அவ்வளவு தூரம் அவநம்பிக்கை உருவானது.
அவளிடம் எதையும் நேரடியாக கேட்க முடியவில்லை, அனைத்தையும் மறைத்துக் கொண்டும் பேச முடியவில்லை, தவியாய் தவித்தான். அவளைப் பற்றிய எண்ணங்களே அவனை முழுமையாக ஆக்கிரமித்திருந்த நிலையில், 'அவள் எனக்கு கிடைக்காமல் போய்விடுவாளோ..?', என்ற குழப்பம் அவனுக்குள் வேகமாக வேரூன்ற ஆரம்பித்தது; நாளுக்கு நாள் அது பூதாகரமாக வளர ஆரம்பித்தது. அவனால் யாரிடமும் சரியாக பேச முடியவில்லை. அவனுக்குள் இருந்த அந்த குழப்பம், அவனின் போக்கையே மாற்றி இருந்தது. அவளிடம் பேசுவது, அவனை அறியாமலே குறைந்திருந்தது. இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர ஆரம்பித்தான்.
"hey குணா, என்ன ரொம்ப நல்லா onlinelaye காணோம்? "
"hey..."
"ரொம்ப வேலையா..? evening எப்போ வர்ற இப்போல்லாம்? "
"ம்ம்...வேலைதான்.. வர ரொம்ப லேட் ஆகும்.. after 8.. "
"hey.. overah scene போடாத? உன் வேலையா பத்தி எனக்கு தெரியாதா..?"
"எல்லாரையும் உன்ன மாதிரியே நெனைக்காத.. ஒரு விசயத்துல எறங்கிட்டோம்னா உயிரையும் கொடுப்போம்.. உன்ன மாதிரி இல்ல.."
"இந்த வெட்டி பேச்சுக்கொன்னும் கொறச்சல் இல்ல.."
"}: இப்டியே என்ன வெறுப்பேத்து.. உன்ன வீடு பூந்து ஒரு நாள் அடிக்கப் போறேன்.. அதுவும் உங்க அப்பா முன்னாடி.."
"உன் மூஞ்சி.."
"ஏன்.. செய்ய மாட்டேன்னு நெனைக்கிறியா..?"
"பின்ன.. எங்கப்பாவோட நேர்ல பேசவே நெறையப்பேரு பயப்படுவாங்க தெரியுமா.. நீ வந்து என்ன அடிக்கறேன்னு வேற சொல்ற...!"
"உங்கப்பா பெரிய சூரி... குத்தி கிளிச்சுருவாறு... ஒரு நாளைக்கு பாக்கத்தான போற..."
"செரி.. வெட்டியா ஏன் பேசற..? உருப்படியா எதாவது பேசு.."
[ஆமா இந்த நாலு மாசமா ஏதோ ஈராக் போர நிறுத்தரத பத்தி பேசிக்கிட்டு இருந்த மாதிரியும், இப்போதான் புதுசா வெட்டியா பேசற மாதிரியும் இல்ல சொல்றா.. நூலு விட்டாலே உடனே வெட்டி விட்டுடராளே..], குணா உள்ளுக்குள் கருவினான்.
"செரி நீயே உருப்படியா சொல்லு.."
"நாளைக்கு friday.."
"அதுக்கு.."
"ராவணன் ரிலீஸ்...
மணிரத்னம் படம் first day பார்க்கணும்.."
"மணிரத்னம் ஒரு மொக்க டைரக்டர்.. எதாவது மொக்கையா எடுத்து வெட்சிருப்பான்... ஒன்னு ரெண்டு படத்த தவிர எதுலயும் originality இல்ல.. ரியாலிட்டி இல்ல..
dialogum படு மொக்கையா இருக்கும்..
அதவிட எல்லா படமும் ஒரே ஸ்டைல்ல இருக்கும்.."
"ஓவரா பேசாத.. இந்த வாரம் நான் பார்க்கனும்... நீ வரயா?"
[நா எத்தன டைம் கூப்டு இருப்பேன்.. ஒரு டைமாவது வந்தயா? நீ கூப்டா உடனே வரிஞ்சு கட்டிட்டு வரணுமா? ], அவன் ஈகோ பேசியது.
"போலாம்.. ஆனா வேற படம்.."
"போய் தொல... 'shutter island' போலாமா? Martin scorsese படம்.. great director."
"என்ன பெரிய martin scorsese.. அவன் என்ன பெரிய மண்டேலாவா.. படமே எடுக்க தெரியாது அவனுக்கு.. வித்யாசமா எடுக்கறன்னு சொல்லிட்டு கேவலமா எடுத்து வைப்பான்.."
சிறிது நேரம் அபியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
"ஏன் இப்டி எரிஞ்சு எரிஞ்சு விழறேன்னு நல்லா புரிஞ்சு போச்சு.."
"என்ன புரிஞ்சுது?"
"நீ இங்கிலிஷ்ல weak.. subtitle இல்லாம இங்கிலீஷ் படம் பாக்க மாட்டே.. அதான.."
[யப்பா.. ஆமா பெருசா கண்டுபுடிச்சிட்ட... சும்மா இருடி வெண்ண மவளே.. காலைல கடுப்புகள கெளப்பிட்டு.. ] , உள்ளே புலம்பிக்கொண்டே சொன்னான்,
"பெரிய அறிவாளி நீ.. ".
"என்ன படம் போலாமா?"
"நாளைக்குன்னா போலாம்.. weekend முடியாது.."
"2moro i have lots of work..weekend போலாமே.."
"weekend நான் ஊருக்கு போறேனே.."
"ஊருக்கா.. சொல்லவே இல்ல... என்ன விஷயம்?"
"பொண்ணு பார்க்க..."
"ஏய்ய்... உதார் விடாத.."
"serious ah.. நேத்துதான் confirm ஆச்சு... finalize பண்ணுனதுக்கு அப்புறம் உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்."
பதில் வர தாமதமானது; குணாவுக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. அந்த தாமதத்தை அணுவணுவாக ரசித்தான் குணா. [என்ன வெறுப்பேத்துன இல்ல இப்ப அனுபவி..], பூரித்துக்கொண்டன் குணா.
"என்ன ஆச்சு.. u there?"
"yaya .. இருக்கேன்..
btw, congrats...
கல்யாணம் எப்போ?"
குணாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.
[ச்சே.. எதாவது signal கொடுப்பான்னு பார்த்தா.. கள்ளி கொஞ்சங்கூட கண்டுக்க மாட்டேங்கறாளே... அசைய மாட்டா போலிருக்கே.. 'பொண்டாட்டி எதிர்த்த வீட்டுல இருக்கும்போது, பொண்ணு பார்க்க போறயா'ன்னு கடுப்பாவான்னு பார்த்தா.. casusal ah.. congrats ... சொல்றாளே..!!
நல்லா பேசறாலுக.. நாம நூலு விட்டா, உங்கள முன்ன பின்ன பார்த்ததே இல்லங்கர மாதிரி டாட்டா காட்டிட்டு போயராளுக.. ச்சேய்..]
[ச்சே.. எதாவது signal கொடுப்பான்னு பார்த்தா.. கள்ளி கொஞ்சங்கூட கண்டுக்க மாட்டேங்கறாளே... அசைய மாட்டா போலிருக்கே.. 'பொண்டாட்டி எதிர்த்த வீட்டுல இருக்கும்போது, பொண்ணு பார்க்க போறயா'ன்னு கடுப்பாவான்னு பார்த்தா.. casusal ah.. congrats ... சொல்றாளே..!!
நல்லா பேசறாலுக.. நாம நூலு விட்டா, உங்கள முன்ன பின்ன பார்த்ததே இல்லங்கர மாதிரி டாட்டா காட்டிட்டு போயராளுக.. ச்சேய்..]
"கல்யாணமா..?
இப்போதான் பொண்ணே பார்க்கப்போறோம்.. அண்ணனுக்கு புடிக்கனுள்ள.."
இப்போதான் பொண்ணே பார்க்கப்போறோம்.. அண்ணனுக்கு புடிக்கனுள்ள.."
"அவருக்கு ஏன் புடிக்கணும்..?'
"ஏன்னா பொண்ணு பார்க்கப்போறது அவருக்குத்தானே.."
"மறுபடியும் பொய் சொல்ற.. வீட்ல நீ ஒருத்தன்னு சொன்ன..!!??"
"அண்ணன்தான்.. ஆனா கூடப் பொறந்தவன் இல்ல.. என் cousin.."
"ஷப்பா.. முடியல... ஏன் இப்டி?"
"ஒன்யும் பிரச்னை இல்ல.. அடுத்த வாரம் படத்துக்கு போவோமா?"
மறுபடியும் பதில் தாமதமாக வந்தது.
"அடுத்த வாரம் வேணாம்"
"but y?"
"அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வராங்க.."
"யார ஏமாத்தற.. உனக்குத்தான் அக்காவே இல்லையே.."
"அக்கான்னு யாரு சொன்னா.. மக்கு.. என்ன பார்க்க வராங்க.."
"பொய் சொல்ற.."
"நான் ஏன் பொய் சொல்லணும்..?
இன்னைக்குதான் முடிவாச்சு.."
குணாவால் நம்ப முடியவில்லை, நம்பாமலும் இருக்கா முடியவில்லை. குணாவுக்கு தலை மேல் இடி இறங்கியது போல் இருந்தது. ஏற்கனவே வெறுப்பின் உச்சத்தில் இருந்த அவனை இது நிலை குலைய செய்ததது; ரொம்பவே பாதித்தது. கொஞ்ச நேரம் எதுவுமே அவனுக்கு புரியவில்லை, எதையும் type செய்ய தோணவில்லை. ஆத்திரமாக வந்தது, எதையாவது போட்டு உடைக்க வேண்டும் போலிருந்தது. யாரையாவது அடிக்க வேண்டும் போலிருந்தது. தான் தோற்றுக்கொண்டே இருக்கிறோம் என்பது மட்டும் அவனுக்கு தெரிந்தது. வேகவேகமாக type செய்தான்,
"இந்த வாரம் நான் உன்ன பொண்ணு பார்க்க வரவா?"
மறுபுறமிருந்து பதில் இல்லை..
"அபி.. serious ah சொல்றேன், நான் உன்னோட சேர்ந்து என் வாழ்கைய வாழனுன்னு ஆசப் படறேன்.."
சில நிமிடங்கள் கழித்து, "abi is typing..." என்று chat windowvil தோன்றியது. குணா நடுக்கத்துடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று படபடப்புடன் பார்த்துகொண்டிருந்த போது, chat windowvil அவன் status திடீரென நிறம் மாறி கருமையானது. மேலே பார்த்தான், காத்தாடி உயிரை இழந்து ஓய்ந்து போனது. மின்சாரம் போனதில், அவன் வாழ்க்கையே இருண்டது போல் தோன்றியது. 'அவசரப்பட்டுட்டமோ..' என்று தோன்றியது.. என்ன செய்வதென்று புரியவில்லை.. தைரியம் குறைந்து கொண்டே வந்தது.. உடனே செல்லை எடுத்து dial செய்தான், மறுபுறம் பதில் இல்லை. எவ்வளவு முறை முயன்றும் பதில் இல்லை.
அன்று இரவு கடைசியாக அவன் கூப்பிட்டபோது 'switch off' செய்யப் பட்டுள்ளதாக தெரிய வந்தது. மறுநாள் காலை அவன் எழுந்தபோது மணி 10 ஐ தாண்டி இருந்தது, அவள் வீடு பூட்டி இருந்தது.
elai bharathi rombo nalla irukku lai ... neraya ezuthu ... ur writing style gives a feeling of immediacy to the story ... keep going ... btw, ilamai oonjalaadra maathiri thaan theriyum ,aana athu eppovume oosaladikittu thaan irukku ...
ReplyDeleteneveh thought u r sucha good writer. wonderful.. very very lively ..enjoyed it thoroughly..
ReplyDelete